சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களை 4,000 மைல்கள் தொலைவில் உள்ள ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்க இருக்கிறது. உலகில் முதன் முறையாக இப்படியொரு ஒப்பந்தத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுடன் செய்ய பிரித்தானிய அமைச்சர்கள் முடிவு செய்து உள்ளனர். ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் சூழ்நிலையில், அவர்கள் ருவாண்டாவில்தான் இருப்பார்கள்.
இத்திட்டம் தொடர்பில் ருவாண்டா நாட்டின் தலைநகரான Kigaliயைச் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் சென்றடைந்து உள்ளார். அதன்பின் நேற்று புகலிடக் கோரிக்கையளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைப்பது தொடர்பான 5 ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் அவர் கையெழுத்திட இருந்தார். ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் எண்ணம்கொண்ட அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையத்தயங்குவார்கள் என்று பிரித்தானிய அதிகாரிகள் நம்புகிறார்கள்.