Categories
மாநில செய்திகள்

புகழ்பெற்ற கோவில் திருவிழா…. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு… பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!

வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பன் காரணமாக, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருக்கிறார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் பத்தாவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேஸ்வர பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரில் மீனாட்சி அம்மன் சிறிய தேரில் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.

இதனையடுத்து 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றது. திருவிழாவின் நிறைவையொட்டி, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு நேற்று மாலை புறப்பட்டார். வழிநெடுக உள்ள சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர் நாளை ( 16-ந் தேதி) அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இந்த நிகழ்வைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்துள்ளனர். இதற்கிடையே வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை, ஆற்றங்கரையோரம் இருந்து தரிசிக்க வேண்டும் எனவும் பக்தர்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |