ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 480 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் வந்தனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து கொண்டு படுகாயமடைந்த சுந்தரம், அற்புதம், ராபர்ட், அஜய் உள்பட 11 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 12 மாடுகளை பிடித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் என்பவர் சிறப்பு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் சிறந்த மாட்டின் உரிமையாளராக கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழ் செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோட்டார்சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 2-வது இடத்தை பிடித்த வீரரான மனோஜ், மாடு உரிமையாளர் ரமேஷ் ஆகியோருக்கு எல்.இ.டி டி.வியும், 3 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.