ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வேலுமணி நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகம் பெருமாள் கோவில் இருக்கிறது. நாளை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து மாலை 5 மணிக்கு சூரசம்ஹார விழா நடந்து முடிந்த பிறகு சுவாமிக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா ஆறுமுகப்பெருமானுக்கு புதிதாக வெள்ளி கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் எம்.எல்.ஏ., என்.ஆறுமுகம், கே.நாகலட்சுமி, 11-வது வார்டு நகராட்சி உறுப்பினர் ஏ.என்.முத்துரமணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
Categories