புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிக்கு அவதார தினவிழா நடைபெறவிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு வருகிற 9-ஆம் தேதி அவதார தினவிழா கொண்டாடப்படுகிறது. இது சுவாமிக்கு 427-வது அவதார தின விழாவாகும். இந்த அவதார தினத்தை முன்னிட்டு 5:30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறவிருக்கிறது.
அதன்பிறகு பாதபூஜை, மகா அபிஷேகம் நடைபெறும். இதனையடுத்து மதியம் அன்னதானம் நடைபெறும். அதன்பிறகு மாலை நேரத்தில் பக்தி நிகழ்ச்சி, பல்லக்கு சேவை, கூட்டு பிரார்த்தனை, மங்கள ஆர்த்தி ஆகியவைகள் நடைபெறும். இதன்பிறகு இரவில் அன்னதானம் நடைபெறும். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கலந்து கொள்கிறார். இந்த விழா ஏற்பாடுகளை குமரி மந்த்ராலயம் மற்றும் ஜோதி ஸ்ரீ சாய் இணைந்து செய்துள்ளனர்.