புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிக்கு 427-வது அவதார தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராகவேந்திர சுவாமி திருக்கோவில் நரையூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு 427-வது அவதார தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதன்பிறகு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து குருவி வேங்கன் தொல்காப்பியன் தலைமையில் ராகவேந்திர சுவாமியின் பக்தி பஜனை நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சங்கரலிங்கம் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.