Categories
அரசியல்

புகார் வந்தது…. அதான் ரெய்டு நடக்குது…. “பழிவாங்கும் நடவடிக்கை இல்லை”… முத்தரசன் பேட்டி!!

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்..

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருடைய சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் 43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக 27 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளதாக எப்ஐஆரில்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி ரம்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெய்டுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தொண்டர்கள் என பலரும் இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் அரசியல் பழிவாங்கல் இல்லை.. அவர் அமைச்சராக இருந்தபோதே பகிரங்கமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.. அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்..

Categories

Tech |