அணு உலையை செயலிழக்க செய்யும் பணிகளில் டெக்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஜப்பானில் கடந்த 2011 ம் வருடம் மார்ச் 11 ஆம் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாக கருதப்பட்டு வந்த புகுஷிமா டாய்ச்சி அணு உலைக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் கிடைக்காமல் போனது. மேலும் இதனால் 6 யூனிட்டுகளில் 3 யூனிட்கள் சேதமடைந்து இருக்கின்றன.
இதனால் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகள் கடந்தும் இங்கு மக்கள் வாழ முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கிக் கொண்டிருக்கின்றது அந்த உலை. இதற்கிடையில் புகுஷிமா அணு உலையில் இருக்கும் அணு கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு அந்த அணு உலை முழுமையாக செயலிழக்க செய்யும் பணிகளில் டெப்போ என்ற நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில் புகுஷிமா அணு உலையில் அணுக்கழிவுகள் நிறைந்த சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் கழிவு நீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு 1,000 க்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அணு கழிவுகளை முழுவதிலுமாக அகற்றப்பட்டு இந்த கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்தை ஜப்பான் அரசு நீண்ட காலமாக பரிசீலனை செய்து வருகின்றது. ஆனால் இந்த திட்டத்திற்கு மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடப்படும். இந்த திட்டத்திற்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசுபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலமாக கழிவு நீரை வெளியேற்றுவது அரசின் திட்டம் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த திட்டத்தின் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.