Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர். புதுப்பாளையம் கிராமத்தில் அஜித்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |