பெண் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேடப்பட்டியில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களாக எனக்கும், எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் நாங்கள் தனித்தனியாக வசித்து வருகிறோம்.
இந்நிலையில் எனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாக எனது கணவர் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.