புகைப்படம் எடுக்க முயன்ற வாலிபர்களை காட்டுயானை ஓட ஓட விரட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பண்ணாரி அருகே இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளது. இதனை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காட்டு யானைக்கு அருகில் சென்று அதனை செல்போனில் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த காட்டு யானை 2 பேரையும் ஓட ஓட விரட்டி சென்றது. அப்போது அச்சத்தில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது வனவிலங்குகளுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்கக்கூடாது என வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர்.