Categories
மாநில செய்திகள்

புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

சிஏஏ போராட்டத்தின் போது நடந்த கலவரம், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு அறிவிப்பின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து இருக்கும் அவலம் போன்ற உலகை உழுகின்ற புகைப்படங்களை எடுத்து மக்களின் துயரத்தை உலகின் முன் காட்டியவர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான் போரில் இன்று உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படை மற்றும் தாலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த தாக்குதலில் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புகைப்பட கலைஞர் சித்திக் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் வன்முறை, பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கவேண்டும் என்ற செய்தியை அவரது மரணம் நமக்கு உணர்த்துகிறது. தொற்று நோய்கள், மனிதாபிமான நெருக்கடிகளை படம்பிடித்த சித்திக் மறைவு வேதனை தருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |