ரஷ்ய ஜனாதிபதி புடின் அனு ஆயுதத்தை பயன்படுத்தினால் அவரது பாதுகாப்பு தளபதிகளே அவரை கொல்ல கூடும் என கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் பேராசிரியர் பீட்டர் டங்கன் கூறியுள்ளார். கடந்த புதன் கிழமை ரஷ்ய ஜனாதிபதி ஆற்றிய உரையில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான ரஷ்யாவின் முதல் ராணுவ அணி திரட்டல் பற்றி அறிவித்துள்ளார். மேலும் மேற்கத்திய நாடுகளுடன் தனது நாட்டை அழிக்க திட்டமிட்டு ரஷ்யாவிற்குள் ராணுவ நடவடிக்கைகளை தள்ளுவதற்கு உக்ரைனை ஊக்குவிப்பதற்காகவும் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளை விட அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் ரஷ்யாவிடம் இருப்பதாகவும் தேவைப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு குழப்பமும் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் UCL ஸ்கூல் ஆப் ஸ்லாவோனிக் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் பேராசிரியர் பீட்டர் டங்கன் பிரித்தானிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள தகவலில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உண்மையில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஆணை பிறப்பித்தால் அவரது சொந்த தளபதிகளே அவரை கொலை செய்து விடுவார்கள் என கூறியுள்ளார். மேலும் ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட விரும்பினால் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சர்ஜி மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளின் பொது பணியாளர்களின் தலைவரான வலேரி வாசிலிவிச் ஜெராசிமோவ் போன்றோர் மூலமே செயல்படுத்த வேண்டும். அப்படி இருக்கும்போது புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டால் அதனை ஷோய்கு மற்றும் ஜொராசிமோவ் மறுத்துவிடுவார்கள். அதன் பின் அவர்களை புடினுக்கு எதிராக நகர்ந்து அவரை கொல்ல வேண்டியிருக்கும் என பேராசிரியர் டங்கன் கூறியுள்ளார். மேலும் புதுமை கொலை செய்ய வேண்டும் என்றால் FSB உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் ஆனால் குடிநீர் கொலை செய்வது அவ்வளவு ஈஸி இல்லை எனவும் கூறியுள்ளார்.