ரஷ்யப்படை வீரர்களை எதிர்கொள்வதற்காக புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் பயிற்சி பெறுவதற்காக பிரித்தானியா வந்துள்ளார்கள். ஒரு நாட்டின் மீது ஆக்ரோஷமாக போர் தொடுத்த புடினே, போர் செய்தே தீருவேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கும் போது தங்களது தாய்நாட்டைக் காக்கப் போரிடும் உக்ரைனியர்கள் மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன..?
புடினுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று உக்ரைனும் புதியதாக வீரர்களை களமிறக்கிக் கொண்டிருக்கிறது. எனினும் போரிட பயிற்சி வேண்டுமே. ஆகவே அவர்களுக்கு பிரித்தானியாவானது பயிற்சியளிக்க முன்வந்துள்ளது. அந்த வகையில் நூற்றுக்க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் பயிற்சிபெறுவதற்காக பிரித்தானியா வந்துள்ளனர். அவர்களுக்கு ரகசிய இடங்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.