Categories
உலக செய்திகள்

புடினை கடுமையாக விமர்சித்த ஜோ பைடன்… கண்டனம் தெரிவிக்கும் பிரான்ஸ்…!!!

ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து பேசிய வார்த்தைகளுக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் குறித்து ‘For god’s sake this man cannot remain in power’ என்று கூறியிருக்கிறார். மேலும் உக்ரைன் நாட்டை தாண்டி வேறு எந்த நாட்டிற்கும் நுழைய நினைக்கக்கூடாது எனவும், குறிப்பாக நேட்டோ எல்லை பகுதிக்குள் ஒரு சிறு இடத்திலும் கால் வைக்க முயலக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அமெரிக்க அதிபரை கண்டித்திருக்கிறார். அவர் யோசிக்காமல் பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார். வார்த்தைகளாலும் செயல்களாலும் நிலையை மேலும் மோசமடையச் செய்யவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இன்றிலிருந்து வரும் 30-ஆம் தேதி வரை துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. எனவே, இவ்வாறு கருத்து தெரிவித்து, இந்த பேச்சுவார்த்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று நினைக்கிறார்.

இதற்கு விளக்கமளித்த அமெரிக்க மாகாணங்களுக்கான  செயலர்  ஆண்டனி பிளிங்கன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிற நாட்டில் போர் தொடுத்து விடக்கூடாது என்ற அர்த்தத்தில்தான் ஜோ பைடன் பேசினார். ரஷ்யா மட்டுமின்றி எந்த நாட்டின் அரசியலையும் மாற்றம் செய்யக்கூடிய திட்டம் அமெரிக்காவிற்கு கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |