Categories
மாநில செய்திகள்

புட் போர்ட் அடிக்கும் பள்ளி மாணவர்கள்… இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா…?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் வரை செல்லும் இருபத்தி ஏழாம் நம்பர் அரசு பேருந்தில் மாணவர்கள் தினந்தோறும் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருபத்தி ஏழாம் நம்பர் பேருந்துக்கு பதிலாக பேருந்து வழித்தடத்தில் விடப்பட்டுள்ளது. அதில் வீரசோழன், பார்த்திபனூர், கீழப்பெருங்கரை வழியாக பரமக்குடி செல்லும் வழியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்திருக்கின்றனர்.

தமிழக அரசு பள்ளி செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணிப்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எச்சரிக்கை அறிவுரை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை மீறி நடத்துனரும் மாணவர்களோடு சேர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வீரசோழன் முதல் பரமகுடி வரை ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் தினமும் இது போன்ற சிரமமான நிலையில் மாணவர்கள் பயணித்து வருகின்றனர். அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Categories

Tech |