நாம் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில், புண்ணிய தலங்களில் நீராடுவதால் நாம் செய்த பாவம் தொலைந்து போகும். ஆனால் தெரிந்து வேண்டுமென்றே செய்கின்ற பாவங்கள் நிச்சயம் தொலைந்து போகாது. அறிந்தும் அறியாமலும் செய்கின்ற பாவங்கள் மட்டுமே மனதை உறுத்துகிற காலத்தில்,மனம் திருந்திய நிலையிலும் தவறு செய்து விட்டோம் என்பதை நீங்கள் உணர்ந்து அதற்கு பிராயசித்தம் தேட வேண்டும் என்று நினைத்தே புண்ணிய தலங்களில் நீராடுவதால் நீங்கள் செய்த பாவம் தொலையும்.
ஒருவன் தான் செய்தது தவறு என்பதை மனமார உணர்ந்து, அந்த தவறுகளை எண்ணி மனதளவில் வருந்துகின்றனோ அவனுக்கு மட்டுமே புண்ணியத் தலங்களில் நீராடுவதால் பாவம் தொலைந்து போகும். ஒருவன் தனது அடிப்படை குணங்களை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பாவச் செயல்களில் ஈடுபட்டு புண்ணிய நதியில் நீராடினால் அவனது பாவம் நிச்சயம் போகாது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.