புதன் கிழமை பிறந்தவர்கள் உங்களுடைய குணம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள்..!
நீங்கள் திறமைசாலியா..? அப்படி என்றால் கண்டிப்பாக புதன் கிழமையில் பிறந்தவர்களாகத்தான் இருக்க முடியும். வாரத்தின் நான்காவது கிழமை புதன் கிழமை. புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது சூரிய குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகம்.
மேற்கூறிய புதன் ஞானம், நுண்ணறிவு, நடைமுறை ஆகியவற்றை குறிக்கிறது. இந்த புதன் சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் புதன் கிழமையில் பிறந்தவர்கள் தொலைநோக்கு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களால் மற்றவர்களது மனதில் தோன்றுவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இத்தகையவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா..?
நகைச்சுவை குணம்:
புதன் கிழமை பிறந்தவர்கள் நல்ல பேச்சாளர்களாக, தொடர்பாளராக இருப்பார்கள். இவர்களது பேச்சுக்கள் முழுக்க, முழுக்க நகைச்சுவையுடன் இருக்கும். நல்ல நகைச்சுவையாளர் என்றும் கூறலாம். இவர்களது நண்பர் கூட்டத்தை எடுத்துக் கொண்டால் இவர்கள்தான் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
திறமைசாலி:
ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் துல்லியமாக கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதில் வல்லவர்கள் இந்த கிழமை பிறந்தவர்கள். மிகவும் அழகாக இருப்பார்கள். மேலும் இவர்கள் அறிவுசார் நலன்களை கொண்டிருப்பார்கள். முக்கியமாக இவர்கள் அனைத்திற்கும் விடை காண வேண்டும் என்ற ஆவலை கொண்டிருப்பவர்கள்.
சிந்தனை திறன்:
எப்பொழுதுமே எதையேனும் யோசித்தவாறு அல்லது செய்தவரே இருப்பார்கள். இவர்களுக்கு பயணம் மேற்கொள்வது என்பது ரொம்ப பிடிக்கும். ஆனால் தொலை தூர பயணத்தை விட குறைந்த தூரப் பயணம் மேற்கொள்வதை இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் அடிக்கடி எதிலும் கவனம் குறைவாகவே இருப்பார்கள்.
பேசுவதில் வல்லவர்:
நல்ல பேச்சாளர்களாக இருப்பதால் இவர்களுக்கு சேல்ஸ்மேன், அரசியல் மற்றும் வக்கீல் தொழில் பொருத்தமாக இருக்கும். மேலும் இவர்களுக்கு கணித திறமையும், எதிலும் தீர்வுகாணும் என்ற எண்ணமும் கொண்டிருப்பதால் விஞ்ஞான ஆராய்ச்சியும் சிறப்பாகவே இருக்கும். பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
அதிக ஆர்வம் கொண்டவர்:
ஆர்வம்தான் அவர்களது தொழில் வாழ்க்கையை துரிதப்படுத்தும் என்பது முக்கிய காரணமாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது. நகைச்சுவை குணம் கொண்டவர்கள் என்பதால் இவர்களுக்கு நண்பர்களே அமைத்துக் கொள்வதில் சிரமம் இருக்காது. இவர்களது பேச்சு திறமைகளை இவர்களுக்கு நண்பர்களை அமைத்துக் கொடுக்கும்.
மனதில் தோன்றுவதை பேசிவிடுவார்கள்:
இவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொண்டிருக்காமல் தன் மனதில் பட்டதை பளிச்சென்று வெளிப்படையாக பேசி விடுவார்கள். இதனாலேயே இவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள்.
காதல் வாழ்க்கை:
இவர்களது காதல் வாழ்க்கை ரோலர் கோஸ்டரில் பயணம் மேற்கொள்வது போன்று இருக்கும். சண்டை என வந்துவிட்டால் இவர்களது பேச்சுக்கள் காயப்படுத்தும் வகையில் இருக்கும். இவர்களிடம் உள்ள சிறந்த பண்பு , என்ன பிரச்சனை வந்தாலும் வாழ்க்கை துணையை மாற்ற நினைக்கமாட்டார்கள்.
கவன குறைவு:
இவர்கள் கவனக்குறைவாக இருப்பதால் உறவில் பொறுப்பில்லாத நபராக இருப்பார்கள். இவர்கள் நன்கு பேசுவார்களே தவிர சொல்வதை கேட்க மாட்டார்கள். இதனாலேயே இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் தனக்கு அமைந்த வாழ்க்கைத் துணையால் ஈர்க்கப்படாமல், துணையின் அன்பை பெற முடியாமல் தவிப்பார்கள். இந்த நிலையை தவிர்ப்பதற்கு வாழ்க்கைத்துணை சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் உணர்வை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.