Categories
உலக செய்திகள்

புதரிலிருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பெண்.. படுகாயங்களுடன் சிறுவன் மீட்பு.. அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள்..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு இளம்பெண் பேச்சுமூச்சில்லாமல் புதரிலிருந்து மீட்கப்பட்ட 3 மணி நேரத்தில் 20 பேர் கொண்ட கும்பல் மோதலில் ஈடுபட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் உள்ள பாஸல் மண்டலத்தில் இருக்கும் துறைமுக பகுதியில் நேற்று அதிகாலை சுமார் இரண்டு மணிக்கு இருபது நபர்கள் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்த 15 வயது சிறுவனையும், ஒரு இளைஞரையும் மீட்டிருக்கின்றனர்.

ஆனால் அந்த கும்பல் காவல்துறையினர் வருவதற்கு முன்பே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்திற்கு சுமார் மூன்று மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு இளம்பெண் புதருக்குள் பேச்சு மூச்சில்லாமல் கிடந்ததாகவும் அவரை அங்கிருந்த காவலாளிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |