மதுரையில் புதருக்குள் வாலிபர் பிணம் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் விளாங்குடியில் கருவேல மரங்கள் நிறைந்த புதர் மண்டி இருக்கிறது. இதனுள் வெட்டு காயத்துடன் வாலிபர் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கூடல்புதூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அவர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பது கண்டறியப்பட்டது. மேலும் இவர் தனது பெற்றோர்களிடம் அவரது நண்பர்களை பார்க்க செல்லப் போவதாக கூறிவிட்டு வெளியே கிளம்பியுள்ளார். இந்நிலையில் அவரை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.