மதுரையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் 7 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கூடலூரில் மீன் கடை வியாபாரியான பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அவரது பெற்றோர்களிடம் தனது நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வெட்டு காயத்துடன் முட்புதரிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரவீன்குமாரும் அவரது நண்பர்களும் முட்புதருக்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பிரவீன் குமாரை அவரது நண்பர்கள் கொலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே காவல்துறையினர் அக்கொலையில் ஈடுபட்ட ராஜேஷ், அஜீத் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.