மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஷேர் ஆட்டோ ஓட்டுநரான கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் வேறு பகுதிக்கு வீட்டை மாற்றி சென்றுவிட்டனர். ஆனாலும் அந்த மாணவியுடன் கதிரேசன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கதிரேசன் மாணவியை அவனியாபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கதிரேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.