புதருக்குள் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாசில் பகுதியில் புதர்களுக்கு நடுவே இரண்டு கால்கள் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் அங்கே பெண் ஒருவரின் உடலில் ஆடைகள் எதுவுமில்லாமல் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் Alexis(26) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றாலும் அது சாதாரணமான மரணம் அல்ல என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பின்னர் இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினரின் விசாரணையில், வீட்டில் நடந்த சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவரை காணவில்லை என்று Alexin தாயார் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் என்ன வாக்குவாதம் செய்தார்? அவரது உடைகள் களையப்பட்டு இருப்பது எதற்கு? என்பது குறித்து தெரியாத நிலையில் இந்த மர்ம மரணம் மர்மமாகவே நீடிக்கிறது. மேலும் Alexin தொடர்பில் மக்கள் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.