Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதர்களுக்குள் மறைந்த கட்டிடம்…. பயன்படாமல் போன அவலம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சுகாதார வளாக கட்டிடத்தை சுற்றி கருவேல மரங்கள், புதர்கள் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென் வன்னியர் வீதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் இருந்த கட்டிடம் முழுவதும் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் கட்டிடத்தை சுற்றி செடி கொடிகள் கருவேல மரங்கள், புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.எனவே அந்த கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |