வட்டார கோட்டாட்சியர் கீழ்பால பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் கீழக்காடு பகுதியில் அமைக்கப்படும் ரயில்வே கீழ்பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன், தாசில்தார் சுகுமார், தென்னக ரயில்வே அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோட்டாசியர் பிரபாகரன் ரயில்வே கீழ் பாலத்தை ஆய்வு செய்தார்.
அப்போது பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சேர்ந்து இந்த பகுதியில் புதிதாக ரயில்வே கீழ்பாலம் அமைத்தால் ஆத்தாளூர் வீரகாளி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட கீழ் பாலங்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு கீழ் பாலம் அமைக்க கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.