தென்ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களை கூட தாக்கும் என்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிலுள்ள 2 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனாவுக்கு எதிரான முழுமையான தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நபர்களை கூட ஓமிக்ரான் வைரஸ் தாக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.