Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிதாக உறுதி செய்யப்பட்டவை… நம்மை நாம்தான் பாதுகாக்க வேண்டும்… மருத்துவ அலுவலர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் 11 வயது சிறுவனுக்கும், 32 வயது பெண்ணுக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிங்கம்புணரி நகர்புறத்தில் 33 வயது பெண்ணுக்கும், 66 முதியவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்புணரி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் நபிஷா கான் கூறியுள்ளார்.

Categories

Tech |