மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலத்தில் காவல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை சூப்பிரண்டு பால்பாண்டி, தாசில்தார் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், கவுன்சிலர் நாகவல்லி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
அதன்பின்னர் அவர் அருகிலுள்ள இடங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் அச்சம் இன்றி காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்கலாம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சிறப்புரை ஆற்றியுள்ளார்.