Categories
உலக செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட சூப்பர் லீக் போட்டி…. எதிர்ப்பு தெரிவித்த முக்கிய நபர்கள்…. சங்கத் தலைவரின் ட்விட்டர் பதிவு….!!!

ஐரோப்பாவில் தொடங்கப்படும் ‘சூப்பர் லீக்’ போட்டிக்கு இங்கிலாந்தின் கால்பந்து சங்கத்தினுடைய தலைவரான இளவரசர் வில்லியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவிலிருக்கும் கால்பந்து கிளப்புகளான மான்செஸ்டர் யுனைடெட், அட்லெடிகோ மாட்ரிட் உட்பட சில கால்பந்து கிளப்புகள் சேர்ந்து புதிதாக நிறுவப்படும் கால்பந்து போட்டிக்கான ‘சூப்பர் லீக்கை’ அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு UEFA, பிபாவின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய நாட்டின் தேசிய கால்பந்திற்கான சங்கமும் விமர்சனம் தெரிவித்தது. மேலும் பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சனும், பிரான்சின் ஜனாதிபதியான இம்மானுவேல் என்பவரும் சூப்பர் லீக் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் முந்தைய காலத்தைவிட தற்போது முழு கால்பந்தின் சமூகத்தையும், போட்டியினுடைய மதிப்பு மற்றும் போட்டிகளுக்கான நேர்மையையும் பாதுகாக்க வேண்டும் என்று இங்கிலாந்தின் கால்பந்து சங்கத்தினுடைய தலைவரான இளவரசர் வில்லியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |