புதுமண தம்பதிகளுக்காக மருத்துவமனையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக மருத்துவ நல மையம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனையை தொடங்குவதற்கு அரசும், சுற்றுலா துறையும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட இருப்பதால், புதுமண தம்பதிகளுக்கு பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 10 விதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரசவத்துக்காக வரும் பெண்கள் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கிக் கொள்ளலாம்.
இதற்காக 50 படுக்கைகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும். அதன் பிறகு கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத பழக்கங்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து விதமான ஆலோசனைகளையும் மருத்துவர்கள் வழங்குவார்கள். இங்கு தங்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சுற்றுலா என்ற திட்டம் தொடங்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து வரும் புதுமண தம்பதிகளுக்கும் சலுகைகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.