Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்கள்….. சிறப்பாக நடைபெரும் பயிற்சி…. போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு….!!

புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோவில் அருகே ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். இவர் போலீஸ் பணி என்பது மிகவும் உன்னதமான, சிறப்பான பணி ஆகும். எனவே இந்த பணியை அனைவரும் பொறுப்புணர்வோடும், கடமை உணர்ச்சியோடு செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியில் கஷ்டங்கள் இருக்கலாம். இருப்பினும் மகிழ்ச்சியோடு பயிற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும்போது நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதேப்போன்று நீங்களும் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டுமென கூறினார். மேலும்  மாதந்தோறும் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு உங்களுடைய குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் கூறினார்

Categories

Tech |