Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை… கொரோனா பரிசோதனையில்… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் கொரோனோ தோற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 பேர் அரியலூரில் கொரானா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் கொரோனா தோற்றால் ஏற்கனவே 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,794 ஆக அதிகரித்துள்ளது. இதில் 49 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். இந்நிலையில் 4,713 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 32 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |