தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அவருடைய தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் சவுக்கு சங்கர் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் வரை எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2020ஆம் வருடம் சவுக்கு சங்கர் மீது பதிவான மூன்று வழக்குகளிலும், 2021 ஆம் வருடம் பதிவான ஒரு வழக்கிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசின் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு அதிமுக ஆட்சியின் போது போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.