ஆலோசனை கூட்டத்தில் புதின் அவர்கள் இருமிய காட்சி எடிட் செய்யப்பட்டுள்ளதால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
ரஷ்யாவில் அதிபர் புதின் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள போதிய அளவு நிதி இல்லாததால் அது குறித்து காணொளி காட்சிகள் மூலம் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய நிதி மந்திரி ஆண்டன் சிலுவானோவ் புதின் உடன் இருந்துள்ளார். இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் அதிபர் புதின் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்துள்ளதால் அவர் என்னை மன்னிக்கவும் என்று கூறி வாயை மூடி உள்ளார்.
அதன் பிறகும் அதிபர் புதின் தொடர்ந்து பேச திணறியதால் அவருக்கு கடுமையான உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது காணொளியில் தெரிந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த வீடியோ அதன் பின்னர் எடிட் செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதிபர் புதினின் உடல்நிலை பற்றி அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கேட்டபோது அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அதிபர் புதினுக்கு உடல்நல பாதிப்புகள் இல்லை என்று கூறுமாறு கிரெம்ளின் மாளிகை அங்குள்ள அதிகாரிகளை கட்டாயப்படுத்தி உள்ளது என்று சர்ச்சை எழும்பியுள்ளது. பெரும்பாலும் உலக தலைவர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், புதினுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதற்கு ரஷ்ய அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.