ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகள் போரைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது அதிபர் புதினின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei shoigu உடனான கலந்துரையாடலின்போது மேஜையை இறுக்கமாக புதின் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அவரது உடல்நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.