தடை செய்யப்பட்ட ரஷ்ய பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அதிபர் புதின் மான் கொம்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தினை குளித்ததாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஷ்ய பத்திரிக்கை நிறுவனமான ப்ரோகெட் கடந்த ஜூலை மாதம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது ரஷ்ய அதிபர் புதின் குறித்து அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அதிபர் புதின் தைராய்டு மற்றும் புற்றுநோய் நிபுணர்களுடன் தனது மருத்துவ பயணத்தை மேற்கொண்ட போது மான் கொம்புகளின் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தில் குளித்ததாக கூறியுள்ளது.
இந்த கொம்புகள் மான்கள் உயிருடன் இருக்கும் போது வெட்டப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளத. இதற்கிடையே இந்த பத்திரிக்கையில் வேலை செய்யும் பலரும் வெளிநாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ரஷ்ய அரசு குற்றம் சாட்டியுள்ளது.