பிரிட்டனில் இருந்து ஒடிசா திரும்பிய 62 பேர் மாயமாகியுள்ளதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, அங்கிருந்து இந்தியா திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 30-ம் தேதியில் இருந்து, கடந்த 21-ம் தேதி வரை 119 பேர், பிரிட்டனில் இருந்து ஒடிசா திரும்பியுள்ளதாகவும், இதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. நாடு திரும்பியவர்களில் 62 பேர் போலி தொலைபேசி எண்களை தந்துள்ளதாகவும், அவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.