Categories
உலக செய்திகள்

புதிய அதிபர் தேர்தல்…. ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவாரா?…. சூடு பிடிக்கும் அரசியல் களம்….!!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வருகின்ற 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தற்போது இடங்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டமிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே எம்.பி.யான அவரை ஆதரிக்க ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி முன் வந்திருக்கிறது. 225 உறுப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சியின் ஆதிக்கம் தான் உள்ளது. ஆனால் ரணிலை ஆதரிப்பதற்கு கச்சுக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

அதாவது தங்கள் கட்சி சாராத ஒருவரை ஆதரிக்ககூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.எல். பெய்ரீஸ் கூறியுள்ளார. இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவரும், முன்னாள் மந்திரிமான டல்லஸ் அழகபெருமாவை ஆதரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். இவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்கனவே உறுதி செய்துள்ளார். இதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று அறிவித்தார். அதனை போல மற்றொரு எதிர்க்கட்சியும் நாட்டின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியுமான ஜெ.வி.பி. தலைவர் அனுர குமார திசநாயககேவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இவர்களை தவிர முன்னாள் ராணுவம் தளபதி சரத் பொன்சேகாவும் நாட்டின் உயரிய பொறுப்பை வசப்படுத்த களமிறங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவரது கட்சி தலைவரான போட்டியில் இருந்து விலகினால் மட்டுமே அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இலங்கை அதிபர் தேர்தலில் பல தலைவர்கள் களம் இறங்கி இருப்பதால் பலத்த போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Categories

Tech |