Categories
உலக செய்திகள்

புதிய அமைச்சரவை அமைக்க முடிவு…. தீவிரம் காட்டும் பாக். பிரதமர்…. வெளியான தகவல்….!!!!

இம்ரான்கான் ஆட்சியே பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடந்தது. அதில், இம்ரான்கான் தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் அவர் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (வயது 70) பாகிஸ்தானின் புதிய பிரதமராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

அதனை தொடர்ந்து ஷபாஸ் ஷெரிப் புதிய அமைச்சரவையை அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன்படி, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) 7 உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பி.எம்.எல்.என்) கட்சியின் இரண்டு உறுப்பினர்களை தன்னுடைய அமைச்சரவையில் சேர்க்க அவர் முடிவெடுத்துள்ளார்.

Categories

Tech |