மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய இக்கட்டான சூழலில் உலகம் முழுவதும் மருத்துவர்கள் தான் கடவுளாக இருந்து மக்களை காத்து வருகின்றனர். குடும்பத்தை மறந்து உன்னதமான பணியில் ஓயாது பணியாற்றி வரும் இந்நாளில் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வுக்காக பல ஆண்டுகளாக மருத்துவர்கள் போராடுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர் சென்ற அரசு அதை நிறைவேற்றவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் புதிதாக அமைந்த அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.