புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் தாலுகா அலுவலகம் தற்போது அப்பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா அருகே ஊராட்சிக்கு சொந்தமாக சமுதாய கூடத்தில் வைத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் இடத்தில் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் சில பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கடைகள் கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.
இதனால் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தாமதாமான நிலையில் ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டிய கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்பையில் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அப்பகுதியில் செய்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் இந்த இடத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.