தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவதையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.