சென்னையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் செலவின்றி கோட்டிங் பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் மற்றும் பல்வேறு மாற்று செயலிகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார்.
சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் – காயத்ரி தம்பதியின் மகன் ப்ரீத்திக். ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் இணையம் மூலம் கோடிங் எழுத பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பார்க்கக்கூடாத இணையதளங்களை எப்படி பிளாக் செய்வது, உள்ளிட்டவை கற்றுத்தருகிறார். கூகுளுக்கு மாற்றான மேப்பிங் ஆஃப்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மீட், ஜூம் மீட்டுக்கு இணையாக மாற்று ஆஃப்களை உருவாக்கியுள்ளார் பிரதீக். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அவர் கூறுகிறார். லாக் டவுன், ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றால் குழந்தைகள் கையில் மொபைல் போனில் இருப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்ட சூழலில் அதை எப்படி கையாள வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் முறையாக கற்றுக் கொடுத்தால் மிகப் பெரிய பலன் கிடைக்கும் என்கின்றனர் பிரதிக்க்கின் பெற்றோர்கள்.