Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“புதிய இடத்தில் சடலத்தை அடக்கம் செய்ய கூடாது”… இருதரப்பினர் எதிர்ப்பு…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்…!!!!

புதிய இடத்தில் மூதாட்டியின் சடலத்தை புதைக்க இரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் தட்டார் மடத்தில் உள்ள ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் ஆர்.சி ஆலயத்துக்குச் சொந்தமான சுடுகாட்டில்  புதைக்கப்பட்டு வந்த நிலையில் அந்த இடத்தை விரிவாக்கம் செய்யும் பணி காரணமாக நிர்வாகம் அந்த பகுதியில் கொம்மடிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பகுதியில் இடம் வாங்கப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் அந்த புதிய இடத்தில் சடலத்தை புதைக்க கூடாது என அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்த நிலையில் நேற்று ஆர்.சி தெருவில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தால் அவரின் சடலத்தை அந்த புதிய இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதற்கு கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரளான பக்தர்கள் திரண்டனர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.சி தெருவை சேர்ந்தவர்கள் இறந்த மூதாட்டியின் சடலத்தை அந்த புதிய இடத்தில் தான் அடக்கம் செய்வோம் என திரண்டார்கள்.

இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் மற்றும் அதிகாரிகள் திரண்டு வந்து அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தியதில் குறிப்பிட்ட பகுதி மக்கள் புதிய இடத்தில் சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் இப்போதைக்கு அந்த சடலத்தை புதைக்க வேண்டாம் என கூறி சுடுகாட்டிற்கு உரிய அனுமதி பெற்றபின் அங்கு புதைக்கலாம் என அவர்கள் கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட இரு தரப்பினரும் கலைந்து சென்றார்கள். பின் மூதாட்டியின் சடலத்தை அவரின் சொந்த இடத்திலேயே அடக்கம் செய்தார்கள்.

Categories

Tech |