Categories
தேசிய செய்திகள்

புதிய இந்தியாவுக்கான பணிகளை தொடங்குங்க…. வளர்ச்சிக்கான கடிவாளம் உங்கள் கையில்…. பிரதமர் மோடி….!!!!

உத்திரபிரதேசம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சுதந்திர இந்தியாவும் புதிய பயணத்தை தொடங்கியது. மேலும் 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நாடு சொந்த காலில் நிற்க நிறைய பணிகள் நடைபெற்றது.

ஆனால் அதற்கு நிறைய நேரம் வீணானது. நாடு நிறைய நேரத்தை இழந்துள்ளது. 2 தலைமுறைகள் சென்றுவிட்டன. தற்போது நாம் ஒவ்வொரு தருணத்தையும் தவறவிடக்கூடாது. பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் நாட்டின் வளர்ச்சிக்கான கடிவாளத்தைக் கையில் எடுத்து புதிய இந்த பணிகளை தற்போது ஆரம்பிக்கவேண்டும். நாட்டில் அடுத்த 25 ஆண்டுகள் நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டுவதே உங்கள் கடமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Categories

Tech |