2021- 22ல் இந்தியாவின் ஏற்றுமதி 66 ஆயிரத்து 965 டாலராக உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் மாதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்தியாவின் ஏற்றுமதி அளவு 25 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 2021-22-ல் 34.50% அதிகரித்து 66 ஆயிரத்து 965 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
2021 மற்றும் 22 ஆண்டுகளில் மொத்த இறக்குமதி கடந்த ஆண்டைவிட 42.8 சதவீதம் அதிகரித்து 75 ஆயிரத்து 668 கோடி டாலராக அதிகரித்தது. கொரோனா காரணமாக சுற்றுலாத்துறை, விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட சேவைத் துறைகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தும் ஏற்றுமதி அளவு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை மந்திரி புயூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.