Categories
தேசிய செய்திகள்

“புதிய ஐஐடிகள் அமைக்கும் திட்டம் இல்லை”…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அமைப்பது குறித்து எவ்வித திட்டமும் இல்லை என்ற மத்திய கல்வி அமைச்சகம் திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு மத்தே கல்வித்துறையின் இணையமைச்சர் சுபாஷ் சர்கார் பதில் அளித்துள்ளார். அதன்படி நாட்டில் புதிய ஐஐடிகளை நிறுவ தற்போதைய சூழலில் எந்தவித திட்டமும் இல்லை. 2014-15 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஆந்திர, கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் மற்றும் கோவா 5 மாநிலங்களில் புதிய ஐஐடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனை போல 2015- 16 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கர்நாடகத்தில் புதிய ஐஐடி அமைக்கப்படும் என்று ஜார்கண்ட் மாநிலம் தான்பாதில் இந்திய சுரங்கத் தொழில்நுட்பம் பள்ளி ஐஐடி யாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2015 ஆம் ஆண்டில் திருப்தி மற்றும் பாலக்காடு ஆகிய இரு ஐஐடிகளும் செயல்பாட்டுக்கு வந்தது. மேலும் 2016 ஆம் ஆண்டில் பிலாய், ஜம்மு, கோவா மற்றும் தன்பாத் இடங்களிலும் புதிய ஐஐடிகள் தொடங்கப்பட்டது. உத்திரபிரதேசத்தில் ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி வாரணாசி ஆகியவை செயல்பாட்டில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |