Categories
தேசிய செய்திகள்

புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்…. முகநூல், கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்…!!!

புதிய ஐடி விதிகள் மற்றும் நாட்டுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகநூல் மற்றும் கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. சமூக ஊடகங்களின் குறைகளை தீர்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்திருந்த நிறையில் அவற்றை நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் நாட்டிலுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலை குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Categories

Tech |