தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் பரப்புரைக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி. அரசு கட்டிடங்களில் சுவரொட்டி, கட்டவுட், விளம்பரப் பலகை மற்றும் கொடிகளை வைக்கக் கூடாது. தனியார் இடங்களில் உரிமையாளர்கள் அனுமதி தந்தாலும் சுவரில் எழுத, சுவரொட்டி ஒட்ட கூடாது என்று தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகிறது.