தனுஷ்கோடியில் கட்டப்பட்டு வரும் 8 கோடி மதிப்பிலான கலங்கரை விளக்கம்,தேர்தலுக்கு பின் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே புயலின் காரணமாக தனுஷ்கோடி பகுதியில் பல பகுதிகள் அழிந்து போனது. இந்நிலையில் சாலை வசதி வந்த பிறகு ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததை அடுத்து புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தனுஷ்கோடி கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து சார்பாக தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் கலங்கரை விளக்கத்தின் பணிகள் மிகவும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்து வருகின்றனர். மேலும் இக்கலங்கரை விளக்கம் 50 கிலோ மீட்டர் உயரத்தில் கட்டப்படுவது மட்டுமல்லாமல் விளக்கின் மேல் பகுதி வரை கடலின் ஒளி வீசக்கூடிய மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளது. மேலும் மீனவர்களின் நலன் கருதி கண்காணிப்பு பணிக்காக ரேடார் கருவிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் அமைக்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதி வரை சென்று பார்த்து வரும் வகையில் உள்பகுதியில் லிப்ட் வசதிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் உள்ள கலங்கரை விளக்கம் பணி வரும் மே மாதத்திற்குள் முழுமையாக முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிந்தபிறகு மத்திய அரசால் இக்கலங்கரை விளக்கம் திறக்கப்படும் என எதிர்பார்க்ககபடுகிறது .